பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கு கொள்ள ஜனாதிபதி நேற்று அவுஸ்திரேலியா பயணம்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் நேற்று காலை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.எதிர்வரும் 28முதல் 30 வரை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவிருக்கும் அரச தலைவர்கள் மகாநாட்டில் 54 அங்கத்துவ நாடுகளின் அரச தலைவர்களும் சுமார் 3000 பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய பேரவை ஒரு சர்வதேச அமைப்பு என்றவகையில் தனித்துவமான ஓர் அமைப்பாகும். அதன் அங்கத்துவம் உலகின் 05 பெரும் கண்டங்களுக்கு விரிந்து பரந்துள்ள அதே நேரத்தில் அனைத்து முக்கிய பல மதங்களும் பல இனங்களும் இதில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றன.

அபிவிருத்தியடைகின்ற நாடுகளைப் போன்று அபிவிருத்தியடைந்த நாடுகள் பல இதில் உள்ளடங்குகின்றன. மேலும் உலக சனத்தொகையில் 1/3 பங்கினரும் உலக நாடுகளில் 1/4 பங்கும் பொதுநலவாய பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை, சகசீவனம், அபிவிருத்தி என்பவற்றின் பொருட்டு செயலாற்றுகின்ற பொதுநலவாய நாடுகளுக்குப் பொதுவான பல விழுமியங்களும் கோட்பாடுகளும் இருக்கின்றன.

அதன் பிரகாரம் பொதுநல வாய நாடுகளின் அரசுகள் ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம், அனைவருக்கும் சம சந்தர்ப்பம் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக அர்ப்பணத்துடன் செய லாற்றுகின்றது. உணவுப் பாதுகாப்பு, நிலை பேறான அபிவிருத்தி மற்றும் இயற்கை வளங்களின் அபிவிருத்தி போன்ற அங்கத்துவ நாடுகள் முகம் கொடுக்கின்ற தேசிய மற்றும் உலக சவால்கள் தொடர் பாக இம்முறை மகா நாட்டில் விசேட கவனம் செலுத்தப்படும்.

இவற்றைவிட உலக நிதி நெருக்கடிகளை வெற்றி கொள்தல் மற்றும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட உலக சவால்களை வெற்றி கொள்வது தொடர்பாகவும் இம்மகாநாட்டில் கவனம் செலுத்தப்படு மென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அவர்களின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச் சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விளையாட் டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, சஜித்வாஸ் குணவர்தன எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.

பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் 54 வது மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் ஆரம்ப மாகவுள்ளது. பொது நலவாய நாடுகளுக் கான புதிய தலைமையகக் கட்டடத்தை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விட யங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது நலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பைத் தற்பொழுது வகித்துவரும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கிலார்ட், இம்மூன்று நாள் மாநாடு முடிவடையும் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தலைமைப் பொறுப்பை கையளிப்பார். 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு காலப் பகுதிக்கான தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார்.

உறுப்பு நாடுகளில் நல்லாட்சி, மனித உரிமைகள், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, இயற்கைவள முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர் பாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விரிவாக ஆராய்வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளின் 11 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு தயாரித்த அறிக் கையொன்றும் பொது நலவாய தலைவர்கள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கையில் உள்ளடக் கப்படவிருக்கும் சில விடயங்கள் குறித்து அவுஸ்திரேலியா வில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத் தப்பட்டு வருகின்றன. இதேவேளை, பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து மகாராணி அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இவருக்கு அவுஸ்திரேலி யாவில் பெருமளவான மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply