முஹர்ஜியை வரவேற்க இலங்கை தயாரில்லை: டி.ஆர்.பாலு
இலங்கை அரசாங்கம் விரும்பாமல் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்ப இயலாதென மந்திய கப்பல்த்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
நினைத்தவுடன் பிரணாப் முஹர்ஜியைக் கொழும்புக்கு அனுப்பமுடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்குப் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இருப்பதாகவும் கூறினார்.
பிரணாம் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்ப நாங்கள் தயாராகவுள்ளோம். ஆனால், அதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை” என்றார் மத்திய அமைச்சர்.
ஒருவரின் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்வதாயின் வரவேற்பதற்கு மற்றையவர் தயாராகவிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ரி.ஆர்.பாலு, அதேபோல இலங்கை அரசாங்கமும், முஹர்ஜியை வரவேற்கத் தயாராகவில்லையெனவும் கூறினார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் விடயத்தில் மத்திய அரசாங்கம் நேர்மையாக நடத்துக்கொள்வதுடன், தாதம் காட்டவில்லையெனவும் தெரிவித்துள்ளார். பிரணாப் முஹர்ஜி இலங்கை செல்லவேண்டும் என விரும்புகின்றபோதும், நிலைமை அதற்கு சாதகமாக இல்லையெனவும் பாலு குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கொழும்புக்குச் செல்வார் என்பது உறுதியாகியுள்ளபோதிலும், அதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையென மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply