தீபாவளி சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் : ஜனாதிபதி

இலங்கை வாழ் இந்துக்கள் இந்த விசேட பண்டிகைத் தினத்தில் உலகெங்கிலுமுள்ள தங்களது சகோதர இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர். இலங்கையில் இன்று தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீமையையும் அறியாமையையும் நீக்கி ஒளியை வெற்றி கொள்வது மனிதவாழ்வின் முடிவில்லாத தேடலாகும். இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கேற்ப ஒரு சிறந்த வாழ்க்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான போராட்டத்தின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது என்றவகையில் மக்களின் ஆன்மீக சுபீட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் தீபத் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும்.

தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மக்களுக்கு மத்தியில் சுபீட்சத்தை அதிகரித்துள்ளது. மேலும் மிக நீண்டகாலமாக எமது மக்களை பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைந்துள்ளது.

இந்தத் தீபத்திருநாள் இந்து சமயத்தின் பெறுமானங்களைப் போற்றிப் பேணிவரும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சிச் செய்தியைப் பரப்பி அமைதியும் சுபீட்சமும் நிறைந்தவகையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான உணர்வைக் கொடுக்கும். தீபாவளித்திருநாளில் சமாதானச் செய்தியும் நல்லெண்ண ஒளியும் எமது மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் வழி வகுக்கின்ற இனிய திருநாளாய் அமையப் பிரார்த்திக்கிறேன். இலங்கை வாழ் இந்து மக்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள், இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply