சொத்து விபரங்களை 30 ஆம் திகதிக்குள் செயலகத்தில் ஒப்படைக்கவும் ஐ.தே.க. அறிவிப்பு
நடந்து முடிந்த 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தெரிவான 137 உறுப்பினர்களும் தங்களது சொத்து விபரங்களை வரும் 30 ஆம் திகதிக்கு முன்பதாக தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்தது.
23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தெரிவான உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்பதாக ஒப்படைக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் 137 உறுப்பினர்களது நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் மேற்படி பொதுவான அறிவித்தல் விடுக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply