இந்தியா,பிரித்தானியா,பங்களாதேஷ்,நியூசிலாந்து பா.குழு நாளை யாழில்

சர்வதேச நாடுகள் சிலவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.சுமார் நான்கு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாளை யாழ்ப்பபாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ். செல்லவுள்ள குழுவில் இந்தியா, பிரித்தானியா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வடக்கில் புனர்வாழ்வு நிலையங்கள், கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடவுள்ள இவர்கள் யாழ். அரச அதிபரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply