2013 பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை இந்தியா அறிவிப்பு
பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் அடுத்த உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவெடுக்கப்பட்டிருப்பதனால் இப்போதைக்கு அடுத்த உச்சிமாநாடு நடக்கும் இடம் பற்றிய சர்ச்சைக்கு இடமில்லையென்று இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மதாய் அறிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார செயலாளர், 2009ம் ஆண்டிலேயே பொதுநல அமைப்பு நாடுகளின் அரசாங்கத்தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டதை ஞாபகப்படுத் தினார். இது குறித்து ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதனால், இந்த விடயத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறினார்.
இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஒளிவுமறைவற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் வரையில் 2013ம் ஆண்டில் இந்த உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது என்ற தீர்மானத்தை தள்ளி வைக்க வேண்டுமென்று அவுஸ்திரேலியாவும், கனடாவும் கருத்துத் தெரிவித்துள்ளன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு செயலாளர், மேற்கண்ட பதிலைத் தெரிவித்தார்.
இவ் உச்சிமாநாட்டில் சில கல்விமான் களின் குழுவொன்று மனித உரிமைகள் மற்றும் இலங்கையின் சட்டப்பூர்வமான ஆட்சி நடத்தப்படுவது பற்றி ஒரு குழுவை அமைக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கும் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த சிறு விடயங்களை மறந்து அபிவிருத்திக்கான சவால்களுக்கு எவ்விதம் பொதுநலவாய அமைப்பு நாடுகள் முகம் கொடுக்க வேண்டுமென்ற யதார்த்தபூர்வமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே இவ்வமைப்பின் பெரும்பா லான நாடுகள் ஆர்வம் கொண்டிருக்கின்றன என்று ரஞ்சன் மதாய் மேலும் தெரிவித்தார்.
நாம் ஜனநாயக தாற்பரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் சட்டபூர்வமான ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ளோம். எனவே, பொதுநலவாய நாடுகள் ஏற்கனவே உள்ள அமைப்புகளை பலப்படுத்த வேண்டுமேயன்றி புதிய அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமில்லை என்றும் ரஞ்சன் மதாய் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply