தீபவாளி வாழ்த்து செய்தி சிறிரெலோ கட்சி ப.உதயராசா
ஓளிமயமான எதிர்காலத்தினை எதிர் பார்த்து காத்திருக்கும் எம் மக்களிற்கு அவ்வாழ்வு கிடைக்க வேண்டும் என இத்தீபத்திருநாளில் இறைவனை பிரார்த்திப்பதாக சிறிரெலோ கட்சி தலைவர் ப.உதயராசா தனது தீபத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்…..
கடந்த 3 தசாப்தகாலமாக கொடூர யுத்தம் எம் உறவுகளை வதைத்த போது எவ்வாறு எம் உறவுகள் இருண்டயுகத்தில் வாழ்ந்து வந்தனரோ அதே போல தான் இன்றும் எம் உறவுகள் இருண்ட யுகத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறு வாழ்ந்துவரும் மக்களிற்கு இன்றைய தீபத்திருநாளில் ஆவது அவர்களின் கனவு நனவாகுமா என சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் எமது மக்கள் முற்றுமுழுதாக சொந்த நிலங்களில் மீளகுடியமர்த்தப்படாமல் இன்றுவரை அகதிமுகாம்களில் வாழ்ந்துவருகின்ற துர்ப்பாக்கியநிலை எமது மண்ணில் காணப்படுகின்ற போது முன்னால் போராளிகள் சிலர் இன்றையதினம் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அரசு தெரிவித்திருப்பதனை நாம் ஒர் நல்ல சகுணமாக எடுத்துக்கொண்டாலும் பல தசாப்தகாலமாக சிறைகளில் வாடித்தவிக்கும் எம் சொந்தங்களையும் இன்றைய அரசு விடுவிக்குமானால் நாம் சந்தோசப்படமுடியும்.அதுமட்டுமல்லாது காணிப்பதிவு, மீண்டும் பொலிஸ் பதிவு என எம் எறவுகள் தினம் தினம் பல்வேறு இன்னல்களை சந்தித்தவண்ணமே வாழ்ந்துவருகின்றனர்.
எமது உறவுகள் இவ்வாறு வாடித்தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் வெறும் கண்துடைப்புக்களை கண்டு கடந்த காலங்களை போல நாம் ஏமாறாமல் எமது உறவுகளின் எதிர்காலத்தினை சுபீட்சமானதாகவும் ஒளிமயமானதாகவும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டுமாயின் வெவ்வேறு நிலைப்பாட்டில் பிரிந்திருக்கின்ற தமிழ் கட்சியினர் எமது மக்களின் வாழ்வினை உணர்ந்து தமது அகங்காரங்களை இன்றைய தீபத்திருநாளிலிருந்து விட்டுவிட்டு எமது மண்ணில் எமது உறவுகள் தலைநிமிந்து ஒளிமயமான வாழ்வு கொண்ட தமிழனாக வாழ வழிவகுக்கவேண்டும் என நாம் இந்த தருணத்தில் வேண்டுகோள்விடுக்கின்ற அதேவேளை எம்மை சுற்றியிருக்கும் தீமைகளை அகற்ற,எமது வளரும் சந்ததியினரின் அறியாமையினை அகற்ற நாமனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதோடு நன்மைக்கான தீப ஒளி ஏற்றும்,தீபாவளியை கொண்டாடும் அனைவருடனும் சிறிரெலோ கட்சி இணைந்து கொள்கின்றது.
எஸ்.செந்தூரன்
ஊடகசெயலாளர்
077-1242732
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply