பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்; 54 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பமாகிறது.உலகளாவிய 54 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் சார்பில் கலந்துகொள்கிறார்.
இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3000 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பதுடன் இன்றும் நாளையும் இருநாள் நிகழ்வாக இம்மாநாடு நடைபெறவுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் கடந்த 24ம் திகதி அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாயினர், இக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிளார்ட்டுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு நாடு களுக்குமிடையிலான பொதுவான விட யங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கு மிடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இச் சந்திப்பு அமைந்தது.
அதனையடுத்து அன்றைய தினம் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெலின் ரூட்டைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி நேற்றைய தினம் பொதுநலவாய நாடுகளின் வர்த்தகப் பேரவைக் கூட்டத் தொடரில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் தற்போது நிலவும் அமைதிநிலை தொடர்பாகவும் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றம் பற்றியும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய நாடுகளின் அமைப்பு தனித்துவமான ஒரு சர்வதேச அமைப்பாகும். பல இனங்கள் மதங்களைக் கொண்டவர்கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் போன்றே அபிவிருத்தியடைந்த நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப் பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply