தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் ரொபேட் பிளேக்குடன் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் மேற்கொண்டு வருவதாக கூட்டமைபின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா சென்றுள்ள சம்பந்தன் தலைமையிலான குழு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக இவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாளக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன் தருவனவாகவும் அமைந்ததாக தெரிவித்த பேச்சுக் குழுவினர் நாளை பேச்சுக்கள் முடிந்ததும் ஊடக அறிக்கை வாயிலாக தங்களின் பேச்சுக்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதே வேளை ஐ.நா.வின் செயலர் பான் கீ மூனுடன் சந்திப்புக்கான சாத்தியம் நவம்பர் 1ம் திகதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 31ம் திகதி கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் கனடிய வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் இக் குழுவினர் அதன் பிற்பாடு மீண்டும் அமெரிக்கா செல்வார்களென கருதப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியப்பிரிவுப் துணைச் செயலாராக ரொபேட் பிளேக் அவர்கள் இருக்கும் காலமே தமிழர்களிற்கும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஏற்பட்ட காலமாக மாறும் வாய்ப்புள்ளதையே தற்போதைய சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

ரொபேட் பிளேக் அவர்கள் சென்னையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய காலம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வியலை அறிந்தவராகவும் தமிழ் மொழியை ஓரளவு அறிந்தவராகவும் இருந்தவர் என்பதும் இலங்கையில் யுத்தம் உச்சத்திலிருந்த போது தூதுவராகப் பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply