இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார் : மஹிந்த சமரசிங்க

உண்மையை அறிந்து கொள்வதிலும் அதன் மூலம் இலங்கை மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையிலும் அர்த்த புஷ்டியுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்தவொரு தரப்பினராவது விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் இலங்கை அரசு திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த விரும்புகிறதென்று இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 66வது கூட்டத் தொடரின் சமூக மனிதாபிமான, கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். தற்போது இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வரும் இன ஒருமைப்பாட்டு செயற்பாடுகளுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாம் அங்கீகரிக்க முடியாதென்றும் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அதன் உறுப்பினர்களினதும் பணியை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை இலங்கை எதிர்க்குமென்று தெரிவித்த அமைச்சர், இந்த ஆணைக்குழு அரசாங்கத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் எல்லோரும் சற்று அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் ஜனநாயக ரீதியில் சட்டபூர்வமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதி கார பீடத்தில் அமர்ந்திருக்கிறதென்றும், இந்நாட்டில் உள்ள சகல இன, மத, குல, கலாசாரங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் திறன் அரசாங் கத்திற்கு இருக்கிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று நாட்டில் சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதனால் அரசாங்கம் பொதுப் பணிகளுக்கு பெருமளவு பணத்தை முதலீடு செய்து வீதிகள், ரயில் பாதைகள், தொலைத்தொடர்பு வசதிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

யுத்தம் முடிவடைந்த இறுதிக் கட்டத் தில் இடம்பெயர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் வெற்றிகரமாக அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள் குடியேற்றப் பட்டிருப்பதாகவும் எஞ்சிய சிறு எண் ணிக்கையினரும் விரைவில் மீள் குடி யேற்றப்படுவரெனவும் அவர் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வடபகுதி யில் இப்போது 22சதவீதம் உயர்ந்திருக் கிறதென்றும், ஆயினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இது 8 சதவீதமாகவே இருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதிலிருந்து அரசாங்கம் வடபகுதி மேம்பாட்டில் எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க, யுத்தம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை ஆரம் பித்தார் என்றும் கூறினார். மக்கள் ஜனாதிபதிக்கு அளித்த ஆணையை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி அவர்கள் இந்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply