வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடினர் : ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் உற்சாகமாக தீபாவளி கொண்டாடினார். அதன் பின், அமெரிக்க இந்தியர்களுக்கு விருந்தளித்தார். அதிபர் ஒபாமா, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், தீபாவளியின் போது இந்தியாவில் இருந்தார். மும்பையில் அவரும், அவரது மனைவியும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, இந்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் உற்சாகமாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் உள்ளிட்ட முக்கிய இந்திய அதிகாரிகளும், அமெரிக்க இந்தியக் குடிமக்களில் முக்கியமானோரும் கலந்து கொண்டனர்.
தீபங்களை ஏற்றி வைத்து உரையாற்றிய ஒபாமா, “அமெரிக்காவின் லட்சக்கணக்கானோரின் சிறப்பு தினமாக தீபாவளி உள்ளது. இருளுக்கு எதிராக ஒளி வென்றது, மனத் தளர்ச்சியை நம்பிக்கை வென்றது ஆகியவற்றை இந்நாள் குறிக்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பவுத்தர்கள் ஆகியோர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவின் ஒவ்வொரு துறையிலும் இந்தியர்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன என்றார்.அதன் பின் நடந்த விருந்தில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க இந்தியர்களுடன் ஒபாமா கலந்து கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply