அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிருப்பதால் பயனேதும் விளையப் போவதில்லை : விக்கிரமபாகு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து பேசுவது, உண்மைகளை வெளிக்கொணர்வது விரும்பத்தக்கதே. ஆனால் அவர்கள் அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிராது பொது மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம், அரசியல் கட்சிகளிடம், சமூக அமைப்புக்களிடம், ஊடகங்களிடம் பேச வேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் ஏதாவது நன்மைகள் விளையக்கூடும்.
ஏனெனில் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்தது என்பதை விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
அமெரிக்க அரசுக்குத் தேவையானது தமிழ் மக்களை பாதுகாப்பதல்ல, அவர்களை நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக்கி, அவர்கள் பொருள் காணி ஆகியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு தனது மூலதனத்தை விஸ்தரித்து பன்னாட்டு நிறுவனங்களை இங்கு அமைப்பதே. இந்த நிலையில் அமெரிக்க அரசை மட்டும் நம்பியிருப்பதால் த.தே.கூ.யினர் அடையப் போகும் நன்மை ஒன்றும் இல்லை. அமெரிக்க அரசின் மூலமாக மட்டும் சர்வதேச நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடாது. தமிழ் மக்களைக் கொன்றொழிக்க உதவிய அமெரிக்க அரசினதும் இலங்கை அரசினதும் உறவுகள் சுமுகமாகவே இருக்கின்றன. அமெரிக்கா இலங்கை மீது சில நிர்ப்பந்தங்களை விதிப்பதாகக் காட்டுவது வெறும் பம்மாத்தே ஆகும்.
சர்வதேச சதிக்கு த.தே. கூட்டமைப்பினர் துணை போகின்றார்கள் என்று அரசு புலம்புவதெல்லாம், இவர்களுடைய சதி வெளியே தெரிந்து விடப் போகின்றதே என்ற அச்சத்தினால் தான் இலங்கை அரசிடம்தான் சதி இருக்கின்றதே தவிர சர்வதேசத்தில் எங்கும் சதி இல்லை. இலங்கை அரசு அஞ்சுவது எல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதினால் அல்ல. நான் முன்னே குறிப்பிட்டது போல் ஏனையவர்களுடன் பேசி உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார்களோ என்பதினால் தான்.
அமெரிக்கா சென்றிருக்கும் த.தே.கூ. தலைவர்கள் மேற்கண்டவாறு செயற்படுவார்கள் என்ற கேள்விக்கு பதிலாக அவர்கள் அவ்வாறு செய்தால் அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுவேன்.
அமெரிக்க அரசு இதற்கு ஒரு தீர்வைத் தரும் அல்லது தீர்வின் பாதைக்கு நகர்த்திச் செல்லும் என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.
சர்வதேச சமூகம் தலையிடுவதனால் உள்நாட்டில் பிரச்சினை ஏற்படும் வெளிநாட்டுத் தலையீடு ஏற்படும் என்பதெல்லாம் முற்று முழுதாகவே அவ்வாறு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.
எந்த ஒரு நாட்டிலும் ஏற்படும் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தன் பங்களிப்பை வழங்கி அதனை தீர்த்து வைப்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply