தமிழ் நாட்டில் ரெங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல் வைத்தனர்
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பது தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் உயர்நீதிமன்ற உத்தரவின்படியே அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால் திடீரென்று எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகளை மூடிவிட்டார்கள் என்ற விசனத்தில் பதிலுக்கு மற்ற வியாபாரிகளும் அதிரடியாக தங்கள் கடைகளை மூடிவிட்டனர்.
மிகப் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், சென்னை சில்க்ஸ், காதிம்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு இன்று அதிகாலை சீல் வைக்கப்பட்டது.
பொருள்வாங்க வந்து ஏமாற்றமடைந்து திரும்பும் பொதுமக்களைவிட, கடைகள் மூடப்பட்டதால் இன்றைய வருவாயை இழந்த நூற்றுக்கணக்கான பணியாளர்களைத் தான் ரங்கநாதன் தெருவில் அதிகளவில் காணமுடிந்தது.
கையூட்டு பெற்று விதிமீறல்களைக் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகள் திடீரென இப்போது ஏன் நடவ்டிக்கை எடுக்கவேண்டுமென வியாபாரிகள் குமுறுகின்றனர்.
பொருள் வாங்கமுடியாமல் திரும்புவது ஏமாற்றம் என்று சிலர் கூறினாலும், இந்த நடவடிக்கை சரியானதே, இது எப்போதோ எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றுதான் பொதுவாக கருத்துக்கள் நிலவுகின்றன.
வணிகர்கள் தங்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வேண்டுமெனக் கோருகின்றனர்.
நாளை செவ்வாய்க்கிழமை வணிகர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்வரை ரங்கநாதன் தெரு களையிழந்தே காணப்படும் என்றே தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply