தந்தை செல்வா என்பவர் யார்? அவரை எனக்குத் தெரியாது : மஹிந்த சமரசிங்க
தந்தை செல்வநாயகம் என்பவர் யார்? அவரது சிலை உடைக்கப்பட்டதா? எனக்கு அவரைத் தெரியாதே.யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது?இப்படி கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க. திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலை வரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காடையர்களால் சேதமாக்கப்பட்டது.
இதனால் சிலையின் தலைப் பகுதி கொய்து வீசப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அரசியற் கட்சிகளிடம் சுடரொளி நாளேடு கருத்தினை வினவியபோதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தந்தை செல்வநாயகம் யார்? தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டதா? ஐயோ, எனக்கு அவரைத் தெரியாதே? யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? எனக்கு இதுபற்றி தெரியாததால் கருத்துக் கூறமுடியாது என்று பதிலளித்தார் அமைச்சர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply