லிபியாவின் புதிய தலைவராக அப்டெல் ரஹீம் அல் கீப் தெரிவு

லிபிய இடைக்கால அரசாங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் பொறியியலாளரான இவர் லிபிய தேசிய அதிகார மாற்று சபையை சேர்ந்த 51 உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளார்.

லிபியாவின் புதிய அரசாங்கமானது பொதுத் தேர்தல்கள் இடம்பெறும்வரை ஆட்சி செய்யவுள்ளது. தேசிய அதிகாரமாற்று சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அல் கீப் 26 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையுடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது அப்டெல் ரஹீமுக்கு முதலிடங் கொடுக்கப்படும் பணிகளில் ஒன்றாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply