கூட்டமைப்பு அரசாஙகத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடன் உள்ளகப் பிரச்சினையை பேசுவதற்கு முன்னர் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்துவதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தீர்வுத் திட்டமும் உள்நாட்டுக்குள்ளேயே முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்விவகாரப் பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தும் தரப்பினர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply