அரசு எதிர்ப்பு இணையங்கள் தடுக்கப்படுவதற்கு அமெரிக்கா கவலை
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான இணையத்தளங்கள் தடுக்கப்படுகின்றமை குறித்து அமெரிக்க அரசாங்கம் நேற்று கவலை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சட்டரீதியாக செயற்படும் ஊடக இணையத்தளங்கள் தடுக்கப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முகாமைத்துவங்களை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரானதாக கருதப்படும் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தடை செய்யப்பட்டதையடுத்தே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்தவொரு ஊடகத்தின் பார்வையையும் தூதரகம் ஆதரவளிக்காத நிலையில் நிலையான ஜனநாயகம், உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு ஊடக சுதந்திரம் முக்கியமானதென அமெரிக்கா நம்புகின்றது’ என அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
‘இணையத்தளங்களில் தடங்கல் அற்ற அணுகுமுறை உட்பட கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமையெனவும் அது மதிக்கப்பட வேண்டுமெனவும் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை வருடங்களாக தமிழ்நெற் இணையத்தளம் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply