அரசாங்கம் தீவிர நிலைப்பாட்டில் இல்லை : அமெரிக்காவில் த.தே.கூ

அதிகாரப்பகிர்வு, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் என்பவற்றில் இலங்கை அரசாங்கம் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.. அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், அமெரிக்காவிலுள்ள முக்கிய அதிகாரிகள் பலரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இக்கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் வெளிவரவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பாக உரிய பதில் இல்லையெனில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற விவகாரங்களில் அரசாங்கம் அரசியல் ரீதியான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளமை தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளமைத் தொடர்பில் அமெரிக்க உயரதிகாரிகளிடம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இதுவரை இடம்பெற்ற 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கை களுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறிவிட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் இவ்வாண்டின் இறுதிக்குள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதிருந்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது குறித்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply