இன்று முஸ்லிம்களின் ‘தியாகத் திருநாள்’

முஸ்லிம்களது புனித பெரு நாட்களில் ஒன்றான ஹஜ்ஜூப் பெருநாளை ‘ஈதுல் அல்ஹா’ என்றும் ‘தியாகத் திருநாள்’ என்றும் கூறுவர். இது முஸ்லிம்களது பிறைக்கலண்டரின்படி துல்ஹஜ் மாதம் 10ஆம் நாள் வருவதனால் இதற்கு ‘ஹஜ்’பெருநாள் என்றும் இம்மாதத்தில் நிறைவேற்றும்

முக்கிய மார்க்கக் கடமைக்கு ‘ஹஜ்’ என்றும் அதனை மேற்கொள்பவர்கள் ‘ஹாஜிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தினத்தில் வழமை போல் முஸ்லிமகள்; அதிகாலையிலே குளித்து புத்தாடை அணிந்து வாசைன பூசி பள்ளிவாசல் சென்று வழிபாட்டில் ஈடுபடுவர். இதுவே முக்கிய பெருநாள் கடமையாகும். அதன் பின் வசதி படைத்தவர்கள் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் (இலங்கையில் இது இல்லை) முதலியவற்றில் ஏதாவது ஒன்றை அறுத்து அல்லாஹ்வுக்காக அதனைஅர்பணித்து அதன் மாமிசத்தைப் பகிர்ந்து உண்பர். இதனை குர்பான் அல்லது உல்ஹிய்யா என்பர். இங்கு குறிப்பிட்ட ஒரு தியாகம் இடம் பெறுகிறது.

முஸ்லிம்களின் மூத்த பரம்பரையில் உதித்த நபி இப்ராஹிம் (அலை) அல்லது (ஏப்ரஹாம்) அவர்கள் தனது மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை பலியிடக் கண்ட கனவை நிறைவேற்றச் சென்று அவர் ஒரு வெள்ளாட்டை பலியிட்ட சம்பவம் ஒரு வரலாற்று உண்மை. அதனை நினைவு கூரும் முகமாகவே இக்குர்பான் மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன் சக்தி படைத்தவர்கள் தமது வாழ் நாளில் ஒரு முறை புனித மக்காவிற்குச் சென்று சில மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். (இதிலும் பல்வேறு தியாகங்கள் இடம் பெறுகின்றன).அதுவும் இந்த ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தை மையமாக வைத்தே இடம் பெறுகிறது.

எனவேதான் அதனை ஹஜ் என்றும் அன்றைய தினத்தில் நபி இப்ராகிம் (அலை) அவர்களது தியாகத்தை நினைவு கூரும் பெருநாளை ஹஜ்ஜூப் பெருநாள் என்றும் அழைப்பர்.

ஜவாஹிர் எம்.ஹாபீஸ்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply