இலங்கையில் சித்திரவதைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை : மொஹான் பீரிஸ்

இலங்கையில் சித்திரவதைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவிடம் தெரிவித்துள்ளனர். தென்னாசிய நாடுகள் பல தசாப்தங்களாக சித்திரவதைகளால் போராடி வருவதாகவும் தீவிரவாதம் இதற்கு காரணம் எனவும் இலங்கையில் புலிகளின் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அரசின் சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதனை தடுத்து நிறுத்த இலங்கை 110 சதவீதம் இணக்கம் தெரிவிப்பதாக மொஹான் பீரிஸ் ஜெனீவாவில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply