பயங்கரவாதத்தை தடுக்க சர்வதேசத்துடன் இணைந்துள்ளோம்: அரசாங்கம்
இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் சர்வதேச நாடுகளைப் போன்று விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கமும் தடைசெய்திருப்பதாக சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோய் போன்று சிவில் சமூகத்தைப் பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளைத் தடைசெய்து, இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாடுகளுடன் இணைந்துகொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளை ஏற்கனவே தடைசெய்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நாடுகளுடன் இலங்கையும் இணைந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கான உட்கட்டுமானங்கள் முதலில் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தமையையும் அமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்தததன் மூலம் அந்த அமைப்புக்கு எதிரான போரர்டடத்தில் இணைந்துகொண்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம குறிப்பிட்டார்.
எனவே, இதுவொரு சர்வதேச ரீதியான நடவடிக்கை. இலங்கையில் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பாக விடுதலைப் புலிகள் இல்லை. பிராந்தியத்தில் அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருவதால், அவர்களைத் தடைசெய்து உலக நாடுகள் முன்னெடுத்திருக்கும் பிரசாரத்துடன் இணைந்துள்ளோம்” எனக் கூறினார்.
கதவு திறந்தே உள்ளது
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply