கூட்டமைப்பும் அரசாங்கமும் இரகசியமான முறையில் பேச்சுக்களை நடத்தக்கூடாது : தயாசிறி

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஆரோக்கியமான முறையிலேயே நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் கூட்டமைப்பும் அரசாங்கமும் இரகசியமான முறையில் பேச்சுக்களை நடத்தக்கூடாது. மாறாக வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுக்களை நடத்தவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது யோனைகளை அரசாங்கத்துக்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
ஆனால் அவை எவ்வாறான யோனைகள் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரை தெரியாது. ஆனால் அது தொடர்பில் நாங்களும் தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் கூறினார். அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்புக்கும் இடையில் புதன்கிழமை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
ஐக்கிய மக்கள் தந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சில தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்தப் பேச்சுவார்த்தையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆரோக்கியமான முறையிலேயே பார்க்கின்றது. அரசாங்கம் தமிழ்க் கூட்டமைப்பும் பேச்சு நடத்தி விரைவில் அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என்றே எமது கட்சி விரும்புகின்றது.
 
ஆனால் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் இரகசியமான முறையில் இடம்பெறக்கூடாது.வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுக்கள் இடம்பெறவேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply