அமைச்சர் டக்ளஸ் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக சென்னை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அதனை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரம் மறுப்புத் தெரிவித்துள்ளார். சென்னையில் சிறுவனை கடத்தி சென்று கொலை செய்ததாக அமைச்சர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழங்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது அதனை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் மறுத்துள்ளதுடன் வேறு ஒரு நீதிபதி முன்னிலையில் இவ்வழக்கை நடத்துமாறு தெரிவித்துள்ளார்.
தான் சட்டத்தரணியாக இருந்த போது இந்த வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவாக வாதாடியதாகவும் இதனால் வேறு நீதிபதி முன்னிலையில் வழக்கை விசாரிக்குமாறும் நீதிபதி சுதந்திரம் தெரிவித்துவிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த வழக்கை வேறு நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply