துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கான ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மாநாகர சபைக்குள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு தினமான ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரன் படு கொலை செய்யப்பட்டதுடன் சம்பவத்தில் துமிந்த சில்வா படுகாயமடைந்தார். அவர் ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply