ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வ மத வழிபாடுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையொட்டிய சர்வமத நிகழ்வுகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.சுதந்திர தொழில்சார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த சமய நிகழ்வுகளில் அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று 16ம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு பொரளையிலுள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடும் நாளை மறுதினம் 18ம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்து மத ஆசீர்வாத பூஜையும் அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன.
நாளைய தினம் மாலை 6.00 மணிக்கு கங்காராம விஹாரையில் ‘போதிபூஜா’ பெளத்த மத வழிபாடு இடம்பெறவுள்ளது. அதேவேளை நாளை மறுதினம் 17ம் திகதி இரத்த தானம்,கண்தானம் மற்றும் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply