வட-கிழக்கு பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவு

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் உள்ள வேலையற்றப் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த மாணவர்களின் கோரிக்கை நியாயமானது எனக் கூறியுள்ள ரெலோ இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply