சண்டே லீடர் பிரதான ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க சுட்டுக் கொலை
இன்று முற்பகல் 10.30 மணியளவில் அத்திடிய, பேக்கரி சந்திப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவை மோட்டார் சைக்கிளில் வழிமறித்த இரு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
படுகாயமடைந்த லசந்த கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழு அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு சில மணிநோரம் போராடியிருந்தனர்.அவரின் உடலில் சிறிதளவு இருதயத் துடிப்பு உணரப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றி 2.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக டாக்டர் அனிவில் ஜெயசிங்க தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply