‘வெள்ளைக்கொடி’ வழக்கில் சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார்.
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.

மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply