சர்வதேச சட்ட ஆணைய உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு

சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியானது.

சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பதவியேற்கும் இந்தியா, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இந்த உறுப்பினர் பதவியை வகிக்கும். 2007-ம் ஆண்டிலிருந்து இந்தியா இவ்வமைப்பில் உறுப்பினராகவுள்ளது. இந்தியாவின் சார்பில் நரேந்தர் சிங் இப்பதவியை வகிப்பார்.

இவர் இப்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் சட்ட ஆலோசகராகவும், சட்ட மற்றும் ஒப்பந்தங்கள் துறையின் தலைவராகவும் உள்ளார். மேலும் 2002-ல் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகளின் சட்ட ஆலோசகர்களின் கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, இந்தியாவின் சார்பில் பல்வேறு சட்டக் கருத்தரங்குகளில் நரேந்தர் கலந்து கொண்டுள்ளார்.

சர்வதேச சட்ட ஆணையத்தில் 34 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் அனைவரும் சர்வதேசச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து ஜப்பான், சீனா, கொரியா, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், தாய்லாந்து போன்ற பிற நாடுகளும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையால் 1948-ம் ஆண்டு சர்வதேச சட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply