ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்; விரிவுரையாளர்கள் குற்றச்சாட்டு
அரசாங்கம் உறுதி அளித்தது போன்று வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இது தொடர்பில் கலந்துரையாடவென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் உயர்மட்டக் குழு கூடவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.
அதன்போது எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அளித்த வாக்குறுதியை அடுத்தே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தாம் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply