ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் : கோத்தபாய ராஜபக்ஷ

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும் ஒருபோதும் தயங்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்நாட்டு சட்டவரைமுறைகளுக்கு அமைவாக நாம் நடவடிக்கை எடுப்போம். எந்தவொரு வெளிநாட்டு சக்திகளுக்கும் அடிபணிந்து நடவடிக்கை எடுக்கப்போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply