தற்போதைய நிலை நீடித்தால் டியூனிசியா, லிபியா எகிப்துக்கு ஏற்பட்ட நிலைமையே இங்கும் உருவாகும் : மங்கள் சமரவீர

சட்டம் மழுங்கடிக்கப்பட்ட எந்தவொரு நாட்டிலும் வரவு செலவுத் திட்டம் வெற்றியளிக்கப் போவதில்லை.நாட்டின் இன்றைய நிலைமை நீடிக்குமேயானால் டியூனிசியா, லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளின் நிலைமையே இங்கும் உருவாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“உலகின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தனது நாட்டு நிதிகளையே ஊழல் செய்து பிழைத்திருக்கின்றனர். ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் சர்வாதிகார நிர்வாகங்கள் வீழ்ச்சி கண்டன. அந்த வகையில் தான் கடாபியின் வீழ்ச்சியும் இடம்பெற்றது.

கடாபியைத் தொடர்ந்து எஞ்சியிருக்கின்ற சர்வாதிகார நிர்வாக நாடுகள் தற்போது ஆட்டம் கண்டிருக்கின்றன. அபிவிருத்தியும் ஜனநாயகத்துடனான நல்லாட்சியுமே இங்கு தேவைப்படுகின்றது.
எனினும் இலங்கையானது சர்வாதிகாரத்தி நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply