2012 மும்மொழி ஆண்டு – தொடக்கி வைக்க அப்துல் கலாம் வருகை
2012 ஆம் ஆண்டை மும்மொழிக் கொள்கை ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்த உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளார் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
‘மும்மொழிக்கான இலங்கை‘ என்ற 10 வருடத் திட்டம் ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மும்மொழிகளை கற்பதற்கு மக்களை ஊக்குவிப்பதும், அவர்களிடையே புரிந்துணர்வையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.
இலங்கையில் உள்ள மொழிகளைக் கற்பிக்கும் கலாச்சாரம் ஒன்று இதன் மூலம் ஏற்படும். ஜனாதிபதி செயலகத்தில் இதற்கென இணைப்பு அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப வைபவம் இடம்பெறும் எனவும், அதனை முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தொடக்கி வைப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply