வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவாவிட்டால் அது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் துரோகம்: சிவாஜிலிங்கம்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை வெறுமனே மாவீரர் தின கொண்டாட்டங்களகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி நிரல் போல செய்துவிட்டு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பார்களானால் ஈழப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய ஒரு துரோகமாகத்தான் இருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினருமான சிவாஜிலிங்கம் லங்காசிறி வானொலிக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரினால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும், மாவீரர்களாக இருக்கட்டும் அல்லது சாதாரண பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களுக்கு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகளுக்கும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான உதவியையும் அதற்கான வழிகளையும் செய்வதுதான் மாவீார்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய அஞ்சலியான இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இற்றைக்கு 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து ஈகை செய்தமைக்கு நாங்கள் அனைவரும் அவர்களுக்கு செய்யக்கூடிய கைமாறு இதுவென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply