வடக்கு கிழக்கிலேயே அதிகமான மின் திருட்டு; மின்சார சபைக்கு வருடம் 6 பில்லியன் நஷ்டம்: சம்பிக்க ரணவக்க

வருடாந்தம் மின் திருட்டினால் இலங்கை மின்சார சபை 6 பில்லியன் ருபாவை நஷ்டத்தை எதிர்கொள்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 4 வீதம் இவ்வாறு திருடப்படுகிறது. இதன் பெறுமதி சமுர்த்தி திட்டத்தால் மக்களுக்கு வழங்கும் தொகையைவிட அதிகமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலேயே அதிகமான மின் திருட்டு இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு மொத்த மின் உற்பத்தியில் 87 வீதத்திற்கு மட்டுமே பட்டியல் இடப்படுகிறது எனவும், மீதமுள்ள 13 வீதத்திற்கு கணக்குகளோ பட்டியலோ கிடையாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் நீரேந்து பகுதிகளில் போதிய மழை கிடைக்கவில்லை. எனினும், தொடர்ச்சியான மின் வழங்கலை உறுதிப்படுத்துவதற்கு மின்சார சபை பல நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐ.தே.க எம்.பி. புத்திக பத்திரண பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போதே அமைச்சர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply