கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் உட்பட ஏழு பொலிஸாரும் காயம்
மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்மொன்று மேற்கொள்ளப்பட்டது.
சோஷலிச இளைஞர் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
கொழும்பு டெக்னிக்கல் சந்தியிலிருந்து நிதி அமைச்சை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டனர்.
இதனையடுத்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியின்மையை தோற்றுவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அமைதியின்மையின்போது காயமடைந்த 15 பேர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையை நாடியதாக, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச கூறினார்.
அத்துடன் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொது மக்களில் இருவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக டொக்டர் ஆரியவங்ச மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply