ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்க செனற் சபை கேட்டுள்ளது.
செனற் சபையின் 100 உறுப்பினர்களும், புதிய தடைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானிய மத்திய வங்கியுடன் தொடர்புகளை வைத்திருப்பதை இந்தச் சட்டமூலம் தடை செய்யும்.
ஆனால், இந்தச் சட்டமூலம் பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமாவின் அனுமதி பெறப்பட்ட பின்னர்தான் அது சட்ட அங்கிகாரத்தைப் பெறும்.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி உள்ள வேளையில், இந்தத் தடைகள் எண்ணைச் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்துமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா கருதுவதால், அதற்கு ஆதரவை வழங்குது சந்தேகத்துக்குரியதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply