அமெரிக்க ஆசிய பசுபிக் இராணுவம் வடக்கில் வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அனுமதிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நிறைவேற்று
கிளிநொச்சி உட்பட வடக்கில், வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அமெரிக்காவின் ஆசிய பசுபிக் இராணுவ தலைமையகத்திற்கு இடமளிக்க வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச ஆகியோர் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கோரிக்கை விடுத்த போதிலும், அதனை பொருட்படுத்தாது, அந்த திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆசிய பசுபிக் இராணுவத் தலைமையகத்திற்கு வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கும் அமைச்சரவை பத்திரம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டது.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்டால், எதிர்காலத்தில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான நிலைமை ஏற்படும் என சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் வலியுறுத்தி கூறியிருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தின் போது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழைத்துச் செல்வதற்காக அமெரிக்காவின் ஆசிய பசுபிக் இராணுவ தலைமையகம், இலங்கையின் கடற்பரப்பில் கப்பல் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தாகவும் விமல் வீரவங்ச இதன் போது நினைவூட்டியுள்ளார்.
எனினும், இந்த அமைச்சர்களின் கருத்துக்களை நிராகரித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சரத் அமுனுகம ஆகியோர், அமைச்சரவை பத்திரத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். இதனையடுத்து, சம்பிக்க மற்றும் வீரவங்சவின் நிலைப்பாடுகளை நிராகரித்த ஜனாதிபதி, பத்திரத்திற்கு அனுமதி வழங்கினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply