‘வீரவேங்கைக்கு வணக்கம்’ என பதாகை வெளியிட்டமைக்கு விசனம்

சுன்னாகம் பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்த இளைஞனின் மரணம் தொடர்பாக ‘வீரவேங்கைக்கு வணக்கம்’ என கூறி பதாகையொன்று வெளிவந்தமை குறித்து  பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரெனக் கூறி கைது செய்யப்பட்ட மனநோயாளியான சுமனன் (வயது 28) என்பவரே பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்து அவருடைய சடலம் மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணையும் இடம் பெற்றது.

இந்நிலையில் இத்தகைய பதாகையை வெளியிட்டு மரணமடைந்தவரை புலிகளெனக் கூறி பிழையான வழியில் வழக்கை திசை திருப்பும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டுள்ளதாக இளைஞருடன் தொடர்புடையவர்களும் மற்றும் உறவினர்களும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply