ராஜ்பால் அபேநாயக்கவை தாக்கியவரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்

லக்பிக பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான ராஜ்பால் அபேநாயக்கவின் சுகநலம் அறிவதற்காக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (06) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார்.

சட்டத்தரணிகளின் வைபவமொன்றில் கலந்துகொண்டு அதன்போது தமது கருத்துக்களை தெரிவித்ததன் காரணமாக மற்றுமொரு சட்டத்தரணியின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல; இதுவொரு மோசமான தாக்குதல் எனவும் இதற்கு எதிராக சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

சட்டத்தரணிகளின் வருடாந்த ஒன்றுகூடலாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும், இதில் சட்டத்தரணி ஒருவர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளதெனவும் சுட்டிக்காட்டி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறான தொரு சம்பவம் சட்டத்தரணி ஒருவரினால் இடம்பெறுவது கவலைக்குரியதாகும் எனவும் கூறினார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப் பதற்காக உறுதிபூண்டுள்ள சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதெனவும், இச்செயற்பாடானது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் வலியுறுத்திய அவர் எனவே இதன் குற்றவாளிக்கு எதிராக சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுத்தல் வேண்டுமெனவும் கூறினார்.

எவருக்கும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் காணப்படும். இந்நாட்டின் அடிப்படை உரிமை பற்றி பேசுகின்ற சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு தாக்கியுள்ளமை மிகவும் மோசமாக செயற்பாடெனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் தேசிய வைத்தியசாலை யின் பணிப்பாளர் டாக்டர் சுஜாத்தா சேனாரத்ன, வைத்தியசாலை குழு உறுப்பினர் டாக்டர் ஷெஹான் அiஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply