யாழ்ப்பாணத்தில் பதின்மவயதுக் கர்ப்பங்கள் அதிகரிப்பு: யாழ் அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் இரு மாதங்களில் மட்டும் பதின்மவயதுக் கர்ப்பம் சடுதியாக அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். மாவட்டச் செயலர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பதின்மவயதுக் கர்ப்பம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் பதின்மவயதுக் கர்ப்பம் 256 ஆகவும் அதற்குள் திருமணமாகாத பதின்மவயதுக் கர்ப்பம் 90 ஆகவும் இருந்தது.

ஆனால் செப்டம்பர், ஒக்ரோபர் ஆகிய இரு மாதங்களில் பதின்மவயதுக் கர்ப்பம் 346 ஆகவும் அவற்றுள் திருமணமாகாத பதின்மவயதுக் கர்ப்பம் 114 ஆகவும் அதிகரித்துக் காணப்படுவதாக மருத்துவமனை அறிக்கைகளை கொண்டு மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பதின்மவயதுக் கர்ப்பம் அதிகரித்துச் செல்வதையிட்டு கலாசாரச் சீரழிவுகள் பெருகுகின்றது என்று தொடர்ந்தும் பரப்புரை செய்வதை விடுத்து அவற்றை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெறுமனே அபிவரத்தி தொடர்பாக மட்டும் குரல் கொடுத்துவரும் பொது அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பதின்ம வயதுக் கர்ப்பம் மற்றும் சமூக கலாசாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply