இலங்கையில் 46 பாலங்களை புனரமைக்க பிரான்ஸ் 22 மில்லியன் யூரோ நிதியுதவி
இலங்கையில் பாலங்கள் சிலவற்றை புனரமைக்க பிரான்ஸ் அரசாங்கம் 22 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.இலங்கையின் தேசிய வீதிக் கட்டமைப்பில் உள்ள 46 பாலங்கள் இதன் மூலம் புனரமைக்கப்படவுள்ளன.இவற்றில் அனேகமாக மேல், தென், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் காணப்படும் பாலங்களே புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
கடன் அடிப்படையில் செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சமர்பித்ததோடு அதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply