பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி

இந்தோனேசியாவில் இன்று ஆரம்பமாகவுள்ள பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அந்நாட்டிற்கு விஜயமானார்.பாலித்தீவிலுள்ள நுசாதுவா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜனநாயகம் தொடர்பான மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்தோனேசியாவின் ஜனாதிபதி டாக்டர் சுசிலோ பம்பங் யுதோயோனாவின் விஷேட அழைப்பின்பேரிலேயே ஜனாதிபதி மாநாட்டில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மாற்றமடையும் உலகில் ஜனநாயக ரீதியான பங்குபற்றலை விரிவுபடுத்தல்” ‘ஜனநாயக ரீதியான குரல்களுக்கு பதிலளித்தல்” என்பனவே இந்த இரு மாநாட்டின் தொனிப்பொருள்களாகும்.பிராந்திய நாடுகளைச்சேர்ந்த சுமார் 15 நாட்டு அரச தலைவர்கள் இம்மாநாட்டில் பங்குபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply