அறிக்கை வெளிவரும் வரை இலங்கைக்கான விஜயம் ஒத்தி வைப்பு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையும் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதனை தாம் விரும்புவதாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளார் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் இன்னர் சிற்றி பிரெஸ் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொது மக்கள் உயிர்ச் சேதங்கள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு, நவனீதம்பிள்ளை பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பதவிக்காக இரண்டாது தடவையாக போட்டியிடும் திட்டம் தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் வரையில் இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளார் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply