லஞ்சம் கொடுத்து ஆதரவு தேட நான் மூன்றாம் நிலை அரசியல்வாதியல்ல

லஞ்சம் கொடுத்து ஒருபோதும் செயற்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.கட்சி தலைமைத்துவப் பதவிக்கு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள செயற்குழு வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்து செயற்குழு உறுப்பினர்களை தானும் கரு ஜயசூரியவும் பெற முயற்சிப்பதாக வதந்திகள் பரவவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அது மிகவும் பொய்யான வதந்தி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு லஞ்சம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெற தான் மூன்றாம் தர அரசியல்வாதி அல்ல என சஜித் தெரிவித்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற சசுனட அருண என்ற வேலைத் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply