வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று வியாழன் இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பண்டாரிக்குளம் என்னுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கூட்டுறவுச் சங்க முகாமையாளராகப் பணிபுரியும் 38 வயதான நடராசா பத்மஸ்ரீ என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

கடைசிப் பெண்குழந்தை பிறந்து முப்பத்தோராவது நாள் வைபவம் நடந்து முடிந்த இரவன்றே 7.30 மணியளவில் மேற்படித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளிலும் ஆட்டோவிலும் வந்த ஆயுததாரிகள் பெயர் கூறி இவரை அழைத்ததாகவும் வெளியே வந்ததும் சுட்டதாகவும் கூறப்படுகின்றது. சூட்டுக் காயத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவரைப் பின் தொடர்ந்த ஆயுததாரிகள் மேலும் வேட்டுக்களைத் தீர்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply