அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு: மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அரியநேந்திரன்

வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் குறித்த முக்கிய விடயங்களில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்று எட்டப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயங்களில் அரசாங்கம் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார்.

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு இணக்கப்பா டொன்று எட்டப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் போன்ற மூன்று விடயங்களில் காணப்படும் சவால்கள் குறித்து அரசாங்கப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விரிவாகப் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை களிலும் இந்த மூன்று விடயங்கள் முக் கியமாகக் காணப்பட்டன. இதனடிப்படை யில் தற்போதைய அரசாங்கப் பிரதிநிதி களுடன் நடத்தப்படும் பேச்சுக்களிலும் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு இணக்கப்பாடொன்று எட்டப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விடயங்கள் பற்றி அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் ஆராயப்படும் என்றும் அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply