ஆனையிறவை நோக்கி இரு படை அணிகள் முன்னேற்றம்: எந்த நேரத்திலும் கைப்பற்றப்படலாம்
பளை, சோரன்பற்று பிரதேசங்களைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இராணுவத்தினர் தற்போது ஆனையிறவை நோக்கிச் செல்வதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் சற்று நேரத்துக்கு முன் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனையிறவுப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத்துவமிக்க கேந்திர நிலையமாகத் திகழ்கிறது.
இராணுவத்தின் 53 மற்றும் 55 ஆவது படையணியே ஆனையிறவை நோக்கிய முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளன.
ஆனையிறவு எந்த நேரத்திலும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாமெனவும் அந்த நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, இராணுவத்தினரின் 55 ஆவது படைப் பிரிவினர் நேற்று மாலை சோரம்பற்றுப் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.
சோரம்பற்றுப் பிரதேசம் ஆனையிறவுலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலும் பளையிலிருந்து 5.2 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இராணுவத்தின் 6 ஆவது பிரிவும் 7 ஆவது விஜயபாகு அணியும் 4 ஆவது கெமுனு மற்றும் 8 ஆவது விஜயபாகு படையணிகளே சேரன்பற்றுப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
சேரன்பற்றை கைப்பற்றும் நடவடிக்கையின் போது இராணுவத்தினரின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply