தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான தொல்பொருள் சான்றுகள் உண்டு

வடமாகாணத்தில் சில பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

வடக்கில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது பௌத்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கூறினார்.

தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘அங்கு சிங்கள பௌத்தர்கள் இருந்ததாக சில சக்திகள்  நிரூபிக்க முயற்சிக்கின்றன. உண்மையில் அங்கிருந்தவர்கள் தமிழ் பௌத்தர்களாகும்’ என அவர் கூறினார்.

ஒரு சாராரின் கலாசாரத்தை மற்றொரு கலாசாரத்தின் மீது திணிக்காமல், வடக்கிலுள்ள இந்து சமயத்தலங்களை பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். வடக்கிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சிவபெருமான் சிலை அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply