நாட்டில் யுத்தம் இல்லை; வடக்கில் இராணுவம் தேவை இல்லை
13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதும் வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்குவதும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும் என என ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார்.
‘இப்போது நாட்டில் யுத்தம் இல்லை. எனவே வடக்கில் இராணுவ பிரசன்னத்துக்கான தேவை எதுவுமில்லை. முழுமையான சிவில் நிர்வாகத்தை மீள ஏற்படுத்துவதை நாம் விரும்புகிறோம். இது பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மை வெளிப்படுத்த உதவும். முதலில் வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமகள் வழங்கப்பட வேண்டும். அதன்பின் தேசிய பிரச்சினையின் ஏனைய சிக்கல்கள் குறித்து ஆராயலாம் என’ அவர் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக டெய்லி மிரருக்கு கருத்து தெரிவித்த அவர், எதையும் அமுல்படுத்துவதற்கு முன் மக்களின் அடிப்படை உரிமைகளை அரசஙர்கம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
‘நாட்டில் அண்மைக் காலத்தில் கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்
நாட்டில் கடத்தல்களின் அளவு அபாயகரமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் சமாதானம் நிலவுகிறது. யுத்தகாலத்தில் கூட இந்தளவு மர்மமான காணாமல் போதல்கள் இடம்பெறவில்லை.
அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல, கடத்தல்கள் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவதன் மூலம் அரசாங்கத்தின் ஜோக்கர்; பாத்திரத்தை ஏற்றுள்ளார். காணாமல் போனவர்கள் திரும்பிவந்துவிடுவார்கள் என்று வாராந்த அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கூறும் தைரியத்தை அவர் கொண்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சில விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் சிலவற்றை விட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஒரு தகவலூட்டும் சாதனமாக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தேசியப் பிரச்சினைக்கான ஏக அதிகாரம் கொண்டதாக கருதப்படக்கூடாது.
போர்நிறுத்த உடன்படிக்கையானது அப்போது ஐ.தே.க. ஆட்சியிக்காலத்தில் அமுல்படுத்தப்பட்டபோது அது தேவையானதாக இருந்தது என இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் எல்.ரி.ரி.ஈயிலிருந்து பிரிந்தமை எல்.ரி.ரி.யை அழிப்பதற்கு மிக முக்கிய பங்களிப்புச் செய்த விடயம் என்பதை அது கவனிக்கத் தவறிவிட்டது’ என அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply